கோயில் பணியாளர்களுக்கு ரூ. 4,000 உதவித்தொகை: நாளை வழங்குகிறார் முதல்வர்

கோயில் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட உதவித் தொகையான ரூ. 4,000-ஐ நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில்,

கொரோனா நோய் பெருந்தொற்றினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நிலையான மாதச்சம்பளமின்றி திருக்கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்களின் வாழ்வாதாரத்தினைப் பாதுகாக்கும் வகையில் உதவித்தொகை ரூ.4,000/-, சுமார் ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்களை தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் 3.6.2021 அன்று வழங்கவுள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திருக்கோயில்களில் நிலையான மாதச்சம்பளம் ஏதுமின்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்கள் தற்போது கரோனா நோய்த் தொற்று காலத்தில், திருக்கோயில்களில் பக்தர்கள் வருகை இல்லாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு ரூ.4000/- உதவித் தொகையும், சுமார் ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப்பொருட்கள் கொண்ட தொகுப்பும் வழங்கும் திட்டம் 3.6.2021 அன்று முதலமைச்சரால் துவக்கி வைக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் மூலம் சுமார் 14,000 திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் திருக்கோயில் வாயிலாக உரிமம் பெற்றவர்கள் பயன் பெறுகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.