பஸ்களில் பொருட்களை விற்பனை செய்யத் தடை

கொரோனா வைரஸ் தொற்று நோயைத் தொடர்ந்து, அனைத்து தனியார் மற்றும் இ.போ.ச. பஸ்களில் இடம்பெறும் பல்வேறு வகையான விற்பனை நடவடிக்கைகளை உடனடியாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு, போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர குறித்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

சில நடமாடும் விற்பனையாளர்கள், சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் செயற்படுகின்றனர் என்று போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சிடம், பொதுமக்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதேவேளை, கடந்த மார்ச் மாதம் முதல் ரயில்களில் நடமாடும் விற்பனையாளர்கள் நுழைவதற்கு இலங்கை ரயில் திணைக்களம் தடை விதித்திருந்தது.

இவ்வாறான விற்பனையாளர்களினால் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவக்கூடிய சாத்தியம் இருப்பதால், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Comments are closed.