“வரி வசூல் தொற்றுநோயின் அலைகள் வந்து கொண்டிருக்கின்றன”

நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை நிலவரம் குறித்து, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, இந்தியாவில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாட்தோறும் நிர்ணயித்து வருகின்றன. நாட்டில் தற்போது, பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசலை சரக்கு மற்றும் சேவை வரிக்குள் கொண்டு வர வேண்டும் என, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையுயர்வு குறித்து, சமூக வலைதளமான டுவிட்டரில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:
பல மாநிலங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் நிலையங்களில், பெட்ரோல் போட்டு விட்டு ரசீது வாங்கும் போது மோடி அரசின் பணவீக்கம் குறித்து அறிவீர்கள். வரி வசூல் தொற்று நோயின் அலைகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.