தமிழ்நாடு : தமிழகத்தில் 100 ரூபாயை கடந்த பெட்ரோல் விலை… இன்றைய விலை என்ன தெரியுமா?

தமிழகத்தில் பெட்ரோல், டீசலின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். பொதுத்துறையைச் சேர்ந்த, பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் நிறுவனம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன.

அதன்படி, கடந்த மே மாதத்தில் மட்டும் 19 முறை எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனிடையே மாநிலங்களின் வரிவிதிப்பு காரணமாக ஒவ்வொறு மாநிலங்களிலும் பெட்ரோல் , டீசல் விலையில் வித்தியாசம் காணப்படுகிறது. இதன் காரணமாக ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மட்டுமல்லாது தென் மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஏற்கெனவே பெட்ரோலின் விலை ரூ.100 ஐ கடந்துள்ளது. தற்போது, தமிழ்நாட்டிலும் பெட்ரோலின் விலை 100 ரூபாயை கடந்துள்ளது.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் லிட்டர் 97.69 ரூபாய், டீசல் லிட்டர் 91.92 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏதும் இன்றி அதே விலையில் நீடிக்கிறது.

தமிழகத்தின் பிற மாவட்டங்களில் சற்று ஏற்ற இறக்கமாக இருந்துவருகிறது. அதிகபட்சமாக கடலூர் மாவட்டம், குமராட்சி பகுதியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 99 ரூபாய் 76 காசுகளுக்கு விற்பனையாகிறது.

அதேபோல மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 102.58 ஆகவும், டீசல் விலை ரூ 102.5ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. தலைநகர் டெல்லியில், ஒரு லிட்டர் பெட்ரோல் சில்லறை விற்பனைக்கு ரூ 96.41 ஆகவும், டீசல் ரூ 87.28 ஆகவும்விற்பனை செய்யப்படுகிறது. கொல்கத்தாவில், தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 96.34 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ 90.12 ஆகவும் விற்கப்படுகிறது.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் லடாக் உள்ளிட்ட குறைந்தது ஆறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய்க்கு மேல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.