மக்களுக்கு நீதியைப் பெற்று கொடுப்பதில் ஏற்படும் தாமதத்தை போக்க புதிய நீதிமன்ற ஏற்பாடுகள்.

நீதித்துறையின் தாமதங்கள் எமது நாட்டில் ஒரு தீர்க்கமான கட்டத்தை அண்மித்துள்ளதால்,

அதற்கான காரணமாக அமைந்துள்ள பிரச்சினைகளைக் கருத்தில் கொள்வதற்காகவும்,

மக்களுக்கு நீதியை விரைந்து பெற்றுக் கொடுக்கும் செயன்முறையை மீண்டும் உயிர்ப்பூட்டி் வலுவூட்டுவதற்காகவும் –

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

திட்டமிடலுடன் கூடிய,

இலக்குகளை அடையத்தக்கதான அணுகுமுறை ஒன்றுக்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கு அமைய – முன் வழக்கு விசாரணை மற்றும் ஆரம்பநிலை நீதிமன்றங்களை நிறுவுதல் தொடர்பான ஆய்வுக் கற்கையை மேற்கொள்வதற்காக,

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ருவன் பர்னாந்து அவர்களின் தலைமையில் நீதி அமைச்சர் அவர்கள் குழுவொன்றை நியமித்திருந்தார்.

மேற்படி குழு சமர்ப்பித்துள்ள பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு, கீழ்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது:

• ஆரம்பநிலை நீதிமன்றங்களை நிறுவுவதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை வகுக்கும் வகையில் 1978ஆம் ஆண்டு 02 ஆம் இலக்க நீதித்துறை சட்டத்தை திருத்தம் செய்தல்;

• ஆரம்பநிலை நீதிமன்றங்கள் தொடர்பான விசேட நடைமுறைகளுக்கான ஏற்பாடுகளை வகுப்பதற்காக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தும் வகையில் சட்டமூலத்தைத் தயாரித்தல்.

Leave A Reply

Your email address will not be published.