நாளை(ஜூன் 23) கூடுகிறது மத்திய அமைச்சரவை

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை(ஜூன் 23) ஆலோசனையில் ஈடுபடவுள்ளது.

கடந்த சில நாள்களாக மத்திய அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக பிரதமர் மோடி முக்கிய அமைச்சர்கள் மற்றும் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகின்றது.

இந்நிலையில், நாளை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

மேலும், இந்த கூட்டத்தில் கரோனா தடுப்பூசி உற்பத்தி, மழைக்கால கூட்டத் தொடர் மற்றும் ஜம்மு-காஷ்மீர் தலைவர்களுடன் நாளை மறுநாள் நடைபெறவுள்ள கூட்டத்தை பற்றி ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாக தெரிகின்றது.

Leave A Reply

Your email address will not be published.