டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை அக்டோபர் 17ம் திகதி தொடங்கத் திட்டம்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அக்டோபர் 17ம் திகதி முதல் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி ,7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை அக்டோபர்- நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இந்தியாவில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால் இந்த போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்படுகிறது.

மேலும் ,அக்டோபர் 17-ம் திகதி முதல் நவம்பர் 14-ம் திகதி வரை 20 ஓவர் உலக கோப்பை போட்டியை அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடத்த ஐ.சி.சி. முடிவு செய்திருப்பதாகவும், இதில் தொடக்க கட்ட சில ஆட்டங்கள் ஓமனில் நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.