கொரோனா நோய்தாக்கத்தில் ஆடி அமாவாசை தொடர்பில் மெய்கண்டார் ஆதீனத்தின் வேண்டுகோள்

ஆடி அமாவாசையை முன்னிட்டு கீரிமலை மெய்கண்டார் ஆதீனம உருக்கமான வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளது.

கீரிமலை மெய்கண்டார் ஆதீனத்தினம் சார்பில் தவத்திரு உமாபதி சிவம் அடிகளார் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அதாவது

அண்மைய நாட்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நோய் பரவல் நிலையை கருத்திற் கொண்டு நாம் அனைவரும் மிக இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய இந்த தருணத்தில் உம்ளோம். இந் நிலையில் ஆடி அமாவாசை பிதிர் கடனுக்காக ஒரே இடத்தில் ஒன்று கூடுவதை தவிர்ப்போம்.

எமக்கு அருகிலுள்ள ஆலயத்தில் ஒரே நேரத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் , சமூக இடைவெளியுடன் குருமார்களுக்கோ ஏழைகளுக்கோ தானங்களை வழங்கி எம் முன்னோரை நினைவு கூர்வோம். வீட்டிலிருந்தவாறே எம் அமரத்துவம் அடைந்த தந்தையருக்காக இறை சிவனை மெய்யுருகிப் பிரார்த்திப்போம்.

அறியாத பலர் பல தூர பிரதேசங்களிலிருந்து வந்து ஒன்று கூடுவது ஒரே இடத்தில் நீராடுவது, ஒரே குருமார் ஊடாக தானம் வழங்குவதை தவிர்ப்பதனூடாக பலருக்கு நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பை தவிர்க்க முடியும்.

ஆதலினால் நாம் அனைவரும் எம் அமரத்துவம் அடைந்த முன்னோர்களுக்கு குறிப்பாக தந்தையருக்கு பிதிர்கடன் செலுத்தும் மகோன்னதமான நாளை எம் சக மனிதர்களுக்கும் எமக்கும் குடும்பத்தின் அன்புக்குரியவர்களுக்கும் தீங்கை விளைவிக்கக் கூடிய கொடிய நோய் தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்பு ஏதனையும் ஏற்படுத்தாது இருப்போமாக, என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

 

Comments are closed.