மட்டக்களப்பு விமான நிலையத்தினை பார்வையிட்டார் பிரசன்ன ரணதுங்க.

சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் மக்கள் மயப்படுத்தப்படவுள்ள மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு விஜயம் செய்த சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க விமான நிலையத்தினை இன்று பார்வையிட்டார்.

இதன்படி ,கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் வகையில் விமான போக்குவரத்தினை இலகுபடுத்தி சுற்றுலாப்பயணிகளின் வருகையினை அதிகரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அமைச்சர் குறித்த விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

அந்த விஜயத்தில் இராஜாங்க அமைச்சர்களான டீ.வீ.சனகா, எஸ்.வியாழேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகளும் இணைந்திருந்தனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

மேலும் ,மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு அதிகளவான விமானங்கள் வந்துசெல்லவும் குறைந்த செலவில் விமானப்பயணங்களை முன்னெடுக்கவும் நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் இதன்போது கருத்துத் தெரிவித்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.