வற்றாப்பளை அம்மனிடம் தரிசனம் பெற்ற சுகாதார அமைச்சர்!

இலங்கையின் சனநாயக சோசலிசக் குடியரசின் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அவர்கள் இன்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணத்தை மேற்கொண்டு வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் தரிசனம் பெற்றுச் சென்றுள்ளார்.

இன்று காலை பாதுகாப்பு ஊர்தியில் தெற்கிலிருந்து பயணம் மேற்கொண்ட சுகாதார அமைச்சர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு சென்று மருத்துவமனை நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார். தொடர்ந்து வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார் .

இலங்கையின் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் Covid -19இனால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சரின் தனிப்பட்ட நிகழ்வாக வழிபாடுகளில் கலந்து கொள்ள வந்தமையால் அதனை ஒளிப்பதிவு செய்ய ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

Leave A Reply

Your email address will not be published.