தேவையில்லாத கால், மெசேஜ் வந்தால் ரூ.10,000 அபராதம்! இந்திய அரசு அதிரடி!

வாடிக்கையாளர்களுக்கு தொந்தரவு தரும் போன் கால் வந்தால் ரூ.10,000 வரையில் அபராதம் விதிக்க இந்திய அரசு முடிவுசெய்துள்ளது.

ஸ்மார்ட்போன் வந்தபிறகு வசதிகளைக் காட்டிலும் தொந்தரவுகள்தான் அதிகமாக இருக்கின்றன. தெரியாத நம்பர்களிலிருந்து தினமும் அழைப்புகளும் எஸ்.எம்.எஸ்.களும் வந்துகொண்டிருக்கின்றன.

பொதுவாக வங்கி, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளில் இருந்துதான் அதிகமாக அழைப்புகள் வருகின்றன. நாம் எவ்வளவுதான் பிளாக் செய்து வைத்தாலும் புதிய புதிய நம்பர்களிலிருந்து அழைப்புகள் வரும். இவை பெரும்பாலும் அதிகாரப்பூர்வமற்றவையாகவே இருக்கும்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இந்நிலையில், விளம்பரம் செய்யும் நோக்கத்தில் வாடிக்கையாளர்களுக்கு செல்போன் அழைப்பு, குறுஞ்செய்தி அனுப்புதல் குறித்து புதிய நடவடிக்கைகளை தொலைத்தொடர்பு துறை மேற்கொண்டுள்ளது.

இதற்காக டிஜிட்டல் புலனாய்வு அமைப்பு மற்றும் தொலைத்தொடர்பு பகுப்பாய்வு ஆகிய இரண்டு அமைப்புகளை மத்திய தொலைத் தொடர்புத் துறை நிறுவியுள்ளது.

இந்த இரு அமைப்புகளும் தொந்தரவு தரும் அமைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும். இதுதொடர்பான குற்றங்கள் கண்டறியப்பட்டு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தொந்தரவு தரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு ரூ.1,00ம் முதல் ரூ.10,000 வரையில் அபராதம் விதிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

அதன் பிறகும் மீறல் தொடர்ந்தால், தொலைதொடர்பு இணைப்புகளை வாங்குவதற்கு பயன்படுத்தப்படும் அடையாளம் மற்றும் முகவரி ஆதாரம் 2 வருட காலத்திற்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.