மகளின் காதலனை கொன்று, உடலை குப்பையில் வீசிய தந்தை!

டெல்லியில் தந்தை ஒருவர், தனது மகளை பார்க்க வந்த காதலனை கொன்று, பொது இடத்தில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் இந்திய தலைநகர் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள கராவால் நகரில் கடந்த புதன்கிழமை நடந்துள்ளது.

உத்தரப்பிரதேசம் பாக்பத் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர், டெல்லியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அவர் அங்கு வந்ததற்கான காரணமே அருகில் உள்ள அவரது 17 வயது காதலியை பார்ப்பதற்காகத்தான்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இந்த நிலையில், புதன்கிழமையன்று மாலை, தனது காதலியை அவரது வீட்டிற்கே சென்று பார்த்து வந்துள்ளார். இதனை அப்பெண்ணின் தந்தை (46) எப்படியோ பார்த்துவிட்டார்.

ஏற்கெனவே, விடயம் தெரிந்து மகளின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில், வீட்டிற்கே வந்து மகளை பார்த்ததால் அவருக்கு கோபம் தலைக்கு எறியுள்ளது.

அதனால், அந்த இளைஞரை பிடித்து கை கால்களைக் கட்டிவைத்து, அடித்து, கத்தரிக்கோலால் உடலில் பல இடங்களில் குத்தி சித்திரவதை செய்துள்ளார். சிறிது நேரத்தில் மகளின் காதலன் இறந்துவிடவே, பீதியடைந்து நண்பரை அழைத்து உதவி கேட்டுள்ளார்.

மறுநாள் (வியாழக்கிழமை) அன்று இருவரும் சேர்ந்து இளைஞரின் சடலத்தை, ஒரு உடற்பயிற்சிக் கூடத்திற்கு அருகே உள்ள ஒரு பள்ளத்தில் குப்பையோடு குப்பையாக போட்டு சென்றுள்ளனர்.

மறுநாள், கிடங்கில் பிணம் இருப்பது தெரியவந்த நிலையில், பொலிஸார் அதனை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இறந்துபோன இளைஞருக்கு அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு தொடர்ப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பெண்ணின் தந்தையைபொலிஸார் கைது செய்து விசாரித்தனர். அப்போது நடந்த உண்மைகளை அவர் ஒப்புக்கொண்டார்.

பெண்ணின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்த சம்பவத்தில் அவருக்கு உதவியை மற்றோரு நபரை பொலிஸார் தேடிவருகின்றனர். உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தங்கள் மகனுக்கு அப்பெண்ணுக்கு இடையே தொடர்பு இருந்தது பற்றி தங்களுக்கு ஏதும் தெரியாது என அவர்கள் பொலிஸிடம் கூறியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.