ஒரு மணி நேரம் ஆகியும் வேகல… முட்டையை உடைத்த போது ஒரு கிராமத்துக்கே காத்திருந்த அதிர்ச்சி

குறைந்த விலையில் போலி முட்டையை விற்பனை செய்து ஒரு கிராமத்தையே ஏமாற்றிய வியாபாரியை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம், வரிகுண்டபாடு கிராம பகுதிகளில் வண்டியில் ஒருவர் முட்டை விற்று வந்துள்ளார்.

மார்க்கெட் நிலவரப்படி ஒரு முட்டையின் விலை ரூ.4 முதல் ரூ.6-க்கு விற்கப்படுகிறது. ஆனால், மினி வேனில் முட்டை விற்றுவந்த நபர் 30 முட்டை ரூ.130 என கூறியுள்ளார்.

விலை குறைவாக உள்ளது என அப்பகுதி மக்களும் தேவைக்கு அதிகமாகவே முட்டையை வாங்கியுள்ளனர். அந்த முட்டை வியாபாரியும் எல்லா முட்டைகளையும் விற்று வண்டியை எடுத்துக்கொண்டு கிராமத்தை விட்டு கிளம்பி விட்டார்.

கிராம மக்களோ வாங்கிய முட்டையை சமைக்கும் போது, சுமார் ஒரு மணி நேரமாகியும் முட்டை வேகாமல் அப்படியே இருந்துள்ளது.

அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள் அனைவரும் அந்த முட்டையை உடைத்து பார்க்கும் போது தான் தெரிந்துள்ளது அது பிளாஸ்டிக் முட்டை என்று.

அந்த முட்டை வியாபாரி ஊர் மக்கள் அனைவரையும் ஏமாற்றி முட்டையை விற்பனை செய்துள்ளார் என்று உணர்ந்து, வரிகுண்டபாடு போலீஸ் நிலையத்தில் அந்த முட்டை வியாபாரி மீது கிராம மக்கள் ஏராளமானோர் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், முட்டை வியாபாரியை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.