அமைச்சர். தயாசிறி ஜயசேகர பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியது.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகி உள்ளது.
இவர் உடற்பயிற்சிக்காக இருசக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது, எதிர்த்திசையில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் நெற்றியிலும், கைகளிலும், கால்களிலும் காயம் ஏற்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ,விபத்துக்கு காரணமான மோட்டார் சைக்கிள் சாரதி மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சர் தெரிவித்தார்.