பத்தேகமயில் இருவருக்கு ‘டெல்டா’ வைரஸ் தொற்று!

பத்தேகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட நயாபாமுல மற்றும் திலகஉதாகம ஆகிய கிராமங்களில் டெல்டா வைரஸ் தொற்றுக்குள்ளான இருவர் இனங்காணப்பட்டுள்ளனர் என்று பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த இரு கிராமங்களையும் சேர்ந்த 40 வயதுடைய ஆண், பெண் இருவருக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்டா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண்ணின் கணவர், ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வருபவர் என்றும், அவருக்கும் அவர்களது இரு பிள்ளைகளுக்கும் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரியவருகின்றது.

குறித்த பெண்ணுக்கு ஏற்பட்ட தொற்றின் அறிகுறிகளில் வித்தியாசம் காணப்பட்டதால் அவரது பி.சி.ஆர். பரிசோதனை மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே அவர் டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

இதேவேளை, டெல்டா வைரஸ் தொற்றுக்குள்ளான நபரின் மனைவியும் ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வருபவர் என்றும், அவர்களது இரு பிள்ளைகள் மற்றும் அவர்களுடன் தங்கியுள்ள வயோதிபர்கள் இருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதிபடுத்தபட்டுள்ளது என்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

தொற்றுக்குள்ளானவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்ப.ட்ட நிலையில் தொற்றாளர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.