ஹிஷாலினியின் மரணத்தின் பின் ஆரம்பித்துள்ள ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள்

ஹிஷாலினியின் மரணமும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் எனும் தலைப்பில் கொழும்பு விவேகா பயிற்சி நிலையத்தின் நிறுவனர் K.T. குருசாமி மற்றும் பழ.புஷ்பநாதன் ஏற்பாட்டில் கொழும்பில் ஒருங்கமைப்பு செய்யப்பட்ட கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.

அங்கு மலையகத்திலிருந்து பணிக்காக இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கு வேலை நிமித்தம் வருவோர் குறித்த தகவல்களை பெற்று பதிவு செய்து அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவது , அவர்களோடு தொடர்புகளை பேணுவது மற்றும் அவர்களுக்கான சட்ட ஆலோசனைகளை வழங்குவது போன்ற ஒரு அமைப்பை உருவாக்கும் நோக்கோடு இக் கலந்துரையாடல் இடம் பெற்றது.

இனிவரும் காலங்களில் ஹிஷாலினி போன்றோருக்கு நடந்தது போன்ற விடயங்களை நடக்காமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் ஆராயப்பட்டது.

இதில் ஆன்மீக ஆர்வலர் ரவிஷங்கர சிவாச்சாரியார் அவர்களும், பேராசியர்களான சோ.சந்திரசேகரன் , தை.தனராஜ், மூக்கைய்யா மற்றும் கலாநிதி ரமேஷ் ஆகியோர்களும், மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் போசகர்கள் திரு.மகேஸ்வரன், திரு.பாலசுப்ரமணியம் , அதன் தலைவர் தேவராசன் , பம்பலப்பிட்டி இந்து கல்லூரியின் முன்னாள் அதிபர் பரமேஸ்வரன் ,வர்த்தக பிரமுகர்களான ஞானம் imports ராஜேந்திரன், மதுசா ராமநாதன் , Transteel அமிர்தலிங்கம், வர்த்தகர் T. ராஜரட்ணம், தயாநிதி ஆகியோருடன் பல வர்த்தகபிரமுகர்களும், சமூக ஆர்வலர்களும் , சட்டஆலோசகர் சட்டத்தரணி கமலதாசன் அவர்களும் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.

தகவல் : கொழும்பிலிருந்து கமலேஸ்வரன்

Leave A Reply

Your email address will not be published.