தபால் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 20 பேருக்கு கொரோனா.

பிலியந்தலை தபால் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 20 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது எனப் பிலியந்தலை பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி இந்திக்க எல்லாவல தெரிவித்துள்ளார்.

தபால் நிலையத்தின் பொறுப்பதிகாரி மற்றும் தபால் விநியோகத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஏற்பட்ட நோய் அறிகுறிகளையடுத்து மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையிலேயே 20 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது எனவும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து தபால் நிலையம் மூடப்பட்டு கிருமித் தொற்று நீக்கலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளான அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தொற்றாளர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொரோனாத் தொற்று ஆபத்தால் பிலியந்தலை தபால் நிலையத்துக்கு உட்பட்ட உப தபால் நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.