கம்பஹா பகுதி கொரோனா நோயாளிகள் 7003 பேரை கவனிப்பார் இல்லை; இனி சடலங்கள் அட்டை பெட்டிகளில் தகனம்

கம்பஹா மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட கொரோனா ஒழிப்பு குழு கூட்டத்தில் 7,003 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தோ அல்லது வீட்டில்வைத்தோ பராமரிக்கவோ எந்த நடவடிக்கைளும் எடுக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

கடந்த வாரம், மேற்கு மாகாணத்தில் 12,555 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர், அவர்களில் 4,046 பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கூடுதலாக, 1,506 பேர் வீட்டு பராமரிப்புக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

சடலங்களுக்கான அட்டை பெட்டிகள்

ராகம மருத்துவமனையில் தற்போது 18 சடலங்கள் மட்டுமே இருப்பதாக கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் சஹன் பிரதீப் தெரிவித்தார்.

இனிமேல், கொரோனா உடல்களை தகனம் செய்ய மரப்பெட்டிக்கு பதிலாக அட்டைப் பெட்டியால் ஆன சவப்பெட்டிகளே  பயன்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.