சிற்றி லயன்ஸ் கழகத்தின் ஐந்தாவது நிர்வாக பதவியேற்பு விழா.

யாழ்ப்பாணம் சிற்றி லயன்ஸ் கழகத்தின் ஐந்தாவது நிர்வாக பதவியேற்பு விழா யாழ்ப்பாணம் ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரி மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

யாழ்ப்பாணம் சிற்றி லயன்ஸ் கழகத்தின் செயலளார் லயன் லெனின்குமாரின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சர்வதேச லயன்ஸ் கழகங்கள் இலங்கை மாவட்டம் 306 B1 மாவட்டத்தின் இரண்டாவது உப மாவட்ட ஆளுநர் லயன் பிளசீடஸ் பீற்றரும் அவரது மனைவி சாவித்திரி அவர்களும் கலந்து கொண்டு புதிய நிர்வாக உறுப்பினர்களுக்கு சத்தியப்பிரமாணம் செய்து வைத்தார்.

சிறப்பு விருந்தினர்களாக சர்வதேச லயன்ஸ் கழகங்கள் இலங்கை மாவட்டம் 306 B1 இன் பிரதான இணைப்பாளர் லயன் சிறிப்பிரகாஷ், பிரதி மாவட்ட செயலாளர் லயன் மயூரதன், பிரதி மாவட்ட பொருளாளர் லயன் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, பிராந்திய செயலாளர் லயன் பாலகுமார், பிராந்திய தலைவர் லயன் லெனின்குமார், வலயத்தலைவர் லயன் ஐங்கரன் ஆகியோர் பங்கு பற்றினர்.

இந்த நிகழ்ச்சியில் யாழ்ப்பாணம் சிற்றி லயன்ஸ் ஐந்தாவது தலைவராக லயன் றொனி கஜன், செயலாளராக லயன் ஐங்கரன், பொருளாளராக லயன் நிவேதன், முதலாவது உப தலைவராக லயன் பெண்மணி மயூரிக்கா றஜீவன், இரண்டாவது உபதலைவராக லயன் சுகிர்தரூபன், ஏனைய பதவிகளுக்கு லயன் தனதீசன், லயன் ரமேஷ்குமார், லயன் அஜித் வீரா, லயன் பெண்மணி கஜீதா பத்மரூபன் ஆகியோரும் கழக இயக்குனர்களாக லயன் Dr ஜெயச்சந்திரமூர்த்தி, லயன் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி லயன் லெனின்குமார், மற்றும் லயன் ரமேஷ்குமார் ஆகியோரும் பதவியேற்றனர்.

மேலும் யாழ்ப்பாணம் சிற்றி லியோ கழகமும் இந்த நிகழ்வில் பதவியேற்றுக் கொண்டனர். லியோ கழகத்தின் தலைவராக லியோ கோபி, உபதலைவராக லயோ கவிநயா, செயலாளராக லியோ புஸ்பதீபன் மற்றும் பொருளாளராக லியோ றஜிதா ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்வில் சேவைத்திட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் வதியும் பெண் தலைமத்துவக் குடும்பம் ஒன்றுக்கு வாழ்வாதார முயற்சியாக தையல் இயந்திரம் ஒன்றும் யாழ் செட்டித்தெரு ஆரம்ப பாடசாலை மாணவி ஒருவருக்கு பார்வைக் கண்ணாடி ஒன்றும், லியோ கழகம் சார்பில் கோவிட் சூழலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூபா 2000 பெறுமதியான உலர் உணவுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இறுதியாக பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இரண்டாவது உப மாவட்ட ஆளுநர் கழக உறுப்பினர்களால் நினைவுப் பரிசு வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.