வெறிச்சோடிய நாவலப்பிட்டிய நகரம்.

நேற்று இரவு 10 மணி முதல் நாடெங்கிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கம் அறிவித்துள்ள அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே நகரங்களுக்கு ஒரு சிலர் வந்து செல்கின்றனர். மேலும் வாகன போக்குவரத்தும் இடம்பெறுகின்றது.

நகரங்களில் பொலிஸ் சோதனை சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு வாகனங்கள் சோதிக்கப்படுகின்றன.

அத்தியாவசிய தேவைகள் நிமித்தம் நகரங்களுக்கு வந்து செல்லுகின்ற தனிநபர்களின் ஆவணங்களும் பொலிசாரால் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

நாவலபிட்டிய நகரம் மக்கள் நடமாட்டம் இல்லது காட்சியளிக்கிறது. மருந்தகங்கள் மாத்திரமே திறக்கப்பட்டுள்ளன. வைத்தியசாலைகளின் சேவைகள் இடம்பெறுகின்றன.

Leave A Reply

Your email address will not be published.