கொரோனா குணமாகி எத்தனை நாள்களில் தடுப்பூசி போடலாம்?

“கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 90 நாள்கள் கழித்து நாம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், நமக்கு கொரோனா பரிசோதனையான RT-PCR சோதனை செய்து பாசிட்டிவ் என ரிசல்ட் வந்த அந்த நாளிலிருந்து, சரியாக 90 நாள்கள் முடிந்த பின் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மீண்டவர்களுக்கு, 90 நாள்கள் வரை கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான எதிர்ப்புச் சக்தி இயல்பாகவே இருக்கும். அதனால் 90 நாள்கள் கழிந்த பின் நாம் கொரோனாவிற்கான தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். எந்த இணை நோய்கள் இருந்தாலும், 18-க்கு மேல் எந்த வயதினராக இருந்தாலும் மருத்துவரை ஆலோசித்து 90 நாள்களுக்குப் பின் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல் நல்லது”

Leave A Reply

Your email address will not be published.