க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு.

க.பொ.த சாதாரணதர பரீட்சை (2020) பெறுபேறுகள் எதிர்வரும் இரண்டு வாரங்களில் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

பெறுபேறுகளைத் தயாரிக்கும் பணிகள் இன்னும் சில தினங்களில் நிறைவடைய உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

குறித்த பரீட்சைக்கு 622,000 மாணவர்கள் தோற்றியிருந்ததோடு நடனம், சங்கீதம் உள்ளிட்ட பாடங்கள் இடம்பெறாத காரணத்தினால் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடாமல் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில, செய்முறை பரீட்சை பெறுபேறுகளை தவிர்த்து ஏனைய 8 பாடங்களு்ககான பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பில் சமீபத்தில் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்ட போதிலும் பெரும்பாலான மாணவர்கள் தற்போது இணையவழி ஊடாக உயர்தர வகுப்புக்களின் பாடங்களை கற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.