உலக சுற்றுலா தின வைபவம் பொத்துவிலில் இடம் பெற்றது.

இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் ஏற்பாட்டில் உலக சுற்றுலா தின வைபவம் இன்று பொத்துவில் அருகம்பையில் அமைத்துள்ள Blue Wave Hotel இல் இலங்கை சுற்றுலா மன்றத்தின் தலைவர் AM. ஜௌபர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் SMM. முஷாரப் அவர்கள் கலந்துகொண்டார். அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் DML. பண்டாரநாயக்க மற்றும் சிறப்பு அதிதிகளாக பொத்துவில் பிரதேச செயலாளர் சந்துருவன் அநுருத்த, பொத்துவில் பிரதேச செயலக உதவி செயலாளர் MI. பிர்னாஸ், கடற்படை கட்டளை தளபதி ஜெயந்தி கமகே, ஜயங்க விஜயா ரத்தன, பொத்துவில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரும் பொத்துவில் மற்றும் லகுகல பிரதேச அனைத்து கிராம நிலதாரிகளும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் போது சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் பங்களிப்புச் செய்த கிராம நிலதாரிகள் மற்றும் சுற்றுலாத்துறை Lifeguard அதிகாரிகள் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

மேலும் Girls Surf Club அமைப்பின் வீரங்கனைகள், Safari சுற்றுலா ஊழியர்கள், சுற்றுலாத்துறை முச்சக்கரவண்டி சங்கத்தினர்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வின் பிரதம அதிதியான பாராளுமன்ற உறுப்பினர் SMM. முஷாரப் அவர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலாத்துறையின் பங்களிப்பு குறித்தும், அதையொட்டி சுற்றுலா மையங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டியதன் தேவை குறித்தும் சிறப்புரையாற்றினார்.

Leave A Reply

Your email address will not be published.