“ஸ்டார் ஸ்ட்ரீக்” வான் பாதுகாப்பு அமைப்பை தயாரிக்கும் இந்தியா.

இந்தியாவின் பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் மற்றும் இங்கிலாந்தின் தேல்ஸ் நிறுவனங்கள் ஆகியவை இணைந்து ஒரு ஒப்பந்தம் செய்துள்ளன.

அதன்படி தேல்ஸ் நிறுவனத்தின் “ஸ்டார் ஸ்ட்ரீக்” வான் பாதுகாப்பு அமைப்பை 60% இந்தியாவில் தயாரிக்க உள்ளனர்.

மேலும் இது இந்திய தரைப்படை மற்றும் விமானப்படைகளின் குறுந்தூர வான் பாதுகாப்பு அமைப்புக்கான தேவைகளை சந்திக்கும்.

இந்த ஸ்டார் ஸ்ட்ரீக் ஏவுகணை சுமார் 4 மாக் அதாவது மணிக்கு 1300கிமீக்கும் அதிகமான வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது, இது உலகிலேயே அதிவேகமான குறுந்தூர வான் பாதுகாப்பு ஏவுகணை என்பது கூடுதல் தகவல்.

ஒரு ஸ்டார் ஸ்ட்ரீக் ஏவுதணையில் லேசர் வழிகாட்டப்பட்ட சிறிய குண்டுகள் இருக்கும் அவை இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் தன்மை கொண்டவை ஆகும்.

இதில் இருவகைகள் உள்ளன, 7கிமீக்கும் அதிகமான தொலைவு செல்லக்கூடிய வகை தான் இந்தியாவுக்கு வழங்கப்படும் என சொல்லப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.