பாறையிலிருந்து விழுந்து இருவர் பரிதாப மரணம்!

ஹாலிஎல, ஜகுல்ல நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள பாறையிலிருந்து விழுந்து இருவர் மரணமடைந்துள்ளனர்.

43, 25 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

தனியார் ஒப்பந்த நிறுவனமொன்றில் பணியாற்றி வரும் ஜேசிபி இயந்திரத்தின் சாரதியும் மற்றுமொரு நபருமே மரணமடைந்துள்ளனர்.

குறித்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோதிலும் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என்று பதுளை பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவின் பிரதான வைத்தியர் பாலித ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

குறித்த இருவரும் எதற்காக பாறையின் மீது ஏறினர் என்று இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.