உதவி பேராசிரியர் பணியிடத்துக்கு வருகின்ற 2023ம் ஆண்டு வரை பிஎச்டி கட்டாயம் இல்லை என அறிவிப்பு !- பல்கலைக்கழக மாணியக்குழு

உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு பிஎச்டி படிப்பு கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இதற்கு வரும் 2023ம் ஆண்டு வரை விலக்கு அளித்து பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடத்திற்கு 2021ம் ஆண்டு முதல் பிஎச்டி(PhD) படிப்பு கட்டாயம் என்கிற நடைமுறையை பல்கலைக்கழக மானியக் குழு(University Grants Commission) கடந்த 2018ம் ஆண்டு கொண்டுவந்தது. பேராசிரியர் உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பணியிடங்களில் சேரும் நபர்களின் தகுதியை உயர்த்தும் நோக்கில் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டது.

நடப்பாண்டின் ஜூலை மாதத்திலேயே இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.எனினும், அமல்படுத்தப்படவில்லை. தற்போது கொரொனோ பெருந்தொற்று காரணமாக இந்த ஆண்டு முதல் உதவிபேராசியர் பணியிடத்துக்கு பிஎச்டி படிப்பு கட்டாயம் என்னும் நடைமுறையில் பல்கலைக்கழக மானியக் குழு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அதன்படி பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடத்துக்கு வருகின்ற 2023ம் ஆண்டு வரை பிஎச்டி கட்டாயம் இல்லை என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அடுத்த 2 ஆண்டுகளுக்கு உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு பிஎச்டி கட்டாயம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது .

கொரோனா தொற்று காரணமாக ஆராய்ச்சி மாணவர்கள் குறிப்பட்ட காலத்திற்குள் தங்கள் ஆய்வுகளை முடிப்பத்தில் சிரமம் நிலவுவது தொடர்பாக மாணவர்களிடமிருந்தும் ஆசிரியர் அமைப்புகளிடமிருந்தும் பல்கலைக்கழக மாணியக் குழுவுக்கு கூறப்பட்டது. அதன் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.