உலகில் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இலங்கை 145 இடத்தில்.

பூகோளிய பாதுகாப்பு சுட்டெண் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் உலகில் மிகவும் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலை வெளியிடும். இந்நிலையில் 2021 ஆம் ஆண்டில் உலகில் மிகவும் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் ஐஸ்லாந்தும் உள்ளது.

162 நாடுகள் அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கையில் முதலாவது இடத்தில் ஐஸ்லாந்தும், இரண்டாவது இடத்தில் டென்மார்க்கும், மூன்றாவது இடத்தில் நியூசிலாந்தும் இடம் பிடித்துள்ளன.

இதனை தொடர்ந்து நோர்வே, ஒஸ்திரியா, கட்டார், ஜப்பான், பின்லாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் முதல் 10 நாடுகளுக்குள் உள்ளடங்குகின்றன.

இந்தியா 144 ஆவது இடத்திலும், இலங்கை 145 இடத்திலும் 163 ஆவது இடத்தில் ஆப்கானிஸ்தானும்,
உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.