தினம் ஒரு ஜூஸ் : லெமன் மின்ட்

தேவையானவை: புதினா – 1 கொத்து, எலுமிச்சை -1, சர்க்கரை – 50 கிராம், தண்ணீர் -150 மி.லி, ஐஸ் கட்டிகள் – சிறிதளவு.

செய்முறை: புதினாவைச் சுத்தம் செய்து, அதனுடன் எலுமிச்சைச் சாறு, சர்க்கரைச் சேர்த்து, தண்ணீர்விட்டு மிக்ஸியில் நன்கு அரைக்க வேண்டும். இதை, வடிகட்டாமல் ஐஸ் கட்டிகள் சேர்த்துப் பருக வேண்டும்.

பலன்கள்
* செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்யும்.
* சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கும். சிறுநீரகக் கற்களைக் கரைத்து வெளியேற்றும்.
* வைட்டமின் சி அதிகம் கிடைக்கும் என்பதால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.
* சர்க்கரை நோய், புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும்.
* சரும செல்களைப் புத்துணர்ச்சி அடையச்செய்யும். தேகம் பொலிவாகும்.
* ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும். `ஆர்த்தரைட்டிஸ்’ எனப்படும் மூட்டுகளில் ஏற்படும் கீல்வாத நோய்களைத் தடுக்கும்.

Leave A Reply

Your email address will not be published.