அனுபவமிக்க வீரர்கள் சிறப்பாக செயல்படாததே தோல்விக்கு காரணம்.

அனுபவமிக்க வீரர்கள் சிறப்பாக செயல்படாததே தோல்விக்கு காரணம் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் – இலங்கை அணிகள் மோதின. இப்போட்டியில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்குள் நுழைய முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையை எதிர்கொண்டது.

ஆனால், இப்போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியடைந்தது. அந்த அணியின் ஷிம்ரான் ஹிட்மயர் தவிர எஞ்சிய வீரர்கள் யாரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படவில்லை. இந்த தோல்வியின் மூலம் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை வெஸ்ட் இண்டீஸ் இழந்தது.

இந்நிலையில், இலங்கையுடனான தோல்வி குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்டிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பொல்லார்ட், அணியில் ஒரு சில இளைஞர்கள் கடுமையாக முயற்சித்தனர். ஆனால், என்னையும் சேர்த்து அனுபவ வீரர்கள் யாரும் சிறப்பாக செயல்படவில்லை. இது எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது என்பதை நாங்கள் மறைக்கப்போவதில்லை’ என்றார்.

Leave A Reply

Your email address will not be published.