எளிமையான முறையில் நடந்தது மலாலா யூசுப்சையி திருமணம்.

நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சையிக்கு பிரிட்டனில் எளிமையான முறையில் திருமணம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பெண் குழந்தைகள் கல்விக்காக போராடியதற்காக, மலாலா யூசுப்சையி மீது தலிபான் தீவிரவாதிகள் 2012ல் தாக்குதல் நடத்தினர்.

தலையில் குண்டு பாய்ந்த நிலையில் அவர் உயிர் தப்பினார். இதையடுத்து அமைதிக்கான நோபல் பரிசு வென்றுள்ள மலாலா, 23, கடந்த ஜனவரியில் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் திருமணம் எதற்காக என புரியவில்லை என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அஸர் என்பவருடன் பிரிட்டனில் உள்ள பர்மிங்ஹாமின் எளிமை முறையில் திருமணம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக நேற்று (நவ.09) மலாலா யூசப்சையி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் திருமண புகைபடங்களை வெளியிட்டுள்ளார்.

அதில் , என் வாழ்வில் இது ஒரு பொன்னான நாள், அஸரும் நானும் வாழ்க்கைக்கு துணையாக இருக்க முடிவு செய்தோம். எங்கள் குடும்பத்துடன் பர்மிங்காமில் உள்ள வீட்டில் ஒரு சிறிய நிக்காஹ் விழாவைக் கொண்டாடினோம். உங்கள் ஆசீர்வாதத்தை எங்களுக்கு அனுப்புங்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.