தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞருக்குக் கொரோனா!

யாழ்., பருத்தித்துறை, முதலாம் கட்டைச் சந்திப் பகுதியில் மரக்காலையில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று அதிகாலை 2 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், தும்பளை மேற்கு, பருத்தித்துறையைச் சேர்ந்த சண்முகராஜா துஷ்யந்தன் (வயது – 21) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்துக்குச் சென்ற பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராசா, விசாரணைகளை மேற்கொண்டதுடன், உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொண்டு, அறிக்கை சமர்ப்பிக்குமாறு பருத்தித்துறைப் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இதேவேளை, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் குறித்த இளைஞரின் சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.