அஷ்ட லெச்சுமி என்பது எட்டு வகை லெஷ்மிகளை குறிக்கும்.

அஷ்டலெட்சுமி யோகம்;

அஷ்ட லெச்சுமி என்பது எட்டு வகை லெஷ்மிகளை குறிக்கும்.ஒருவர் ஜாதகத்தில் அஷ்டலெஷ்மி யோகம் இருந்தால்,அஷ்டலெட்சுமிகளும் அவனுக்கு அருள்புரிவார்கள்.இந்த யோகம் எட்டுமடங்கு பலனைதரும்.

அஷ்டலெட்சுமி யோகம் என்பது குரு கேந்திர வீடுகள் ஒன்றில் இருந்து (அதாவது 1, 4, 7, 10ஆம் வீடுகள் ஒன்றில்), அத்துடன் ஆறாம் வீட்டில் ராகுவும் இருந்தால் இந்த யோகம் உண்டாகும்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இந்த யோகத்தால் ஜாதகனுக்கு தனிப்பட்ட பெயர், புகழ், வளர்ச்சி, உயர்ச்சி, அமைதி, மகிழ்ச்சி, எதையும் அனுபவிக்கும் பாக்கியம் அனைத்தும் கிடைக்கும்.

அஷ்டலெஷ்மிகளின் விவரம்..,

1)தனலெட்சுமி – செல்வத்திற்கு.

2)தான்யலெட்சுமி – விளைச்சலுக்கு, விவசாயத்தின் மூலம் வளர்ச்சிக்கு!

3)தைரியலெட்சுமி – துணிச்சலுக்கு, தைரியத்திற்கு.

4)விஜயலெட்சுமி – வெற்றிக்கு.

5)ஆதி லெட்சுமி – சக்திக்கு.

6)வித்யா லெட்சுமி – கல்விக்கு, கற்றலுக்கு.

7)கஜலெட்சுமி – ஊக்கத்திற்கு, மன உறுதிக்கு .

8)சந்தானலெட்சுமி – குழந்தைச் செல்வத்திற்கு.

Leave A Reply

Your email address will not be published.