இடை நிறுத்திய நியமனங்களை மீள வழங்குமாறு கோரி யாழ்பாணத்தில் ஊடக சந்திப்பு

கடந்த அரசு வழங்கிய செயற்திட்ட உதவியாளர் நியமனங்களைப் பெற்ற அநேகரது வேலை வாய்ப்புகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ன.

இப்படி நியமனங்களை பெற்று கடமையில் 2 நாட்களே பொறுப்பேற்ற வேளையில் தேர்தல் ஆணைக்குழு , அந்த நியமனங்களை தேர்தல் கால நியமனங்கள் என கூறி அதற்கு தற்காலிக தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது.

பின்னர் ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர் தேர்தல் ஆணைக்குழு அத் தடையை முற்றாக நீக்கியதுடன் , அந்த நியமனங்களை மீள வழங்குமாறு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் அவ் நியமனங்கள் மீளவும் அவர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை என யாழ் மாவட்ட செயற்றிட்ட உதவியாளர் சங்கத்தினர் ஒன்று கூடி அவர்களது நியமனங்களை மீள வழங்குமாறு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.

அத்தோடு இவ் நியமனங்களை மீள வழங்குமாறு வலியுறுத்தியும் , இந்த நியமனங்கள் தொடர்பாக விளக்கமளித்தும் ஊடக சந்திப்பு ஒன்றை யாழ் மாவட்ட செயற்றிட்ட உதவியாளர் சங்கத்தினால் இன்று யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்றுள்ளது.

யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப் படுத்தி 999 பேருக்கும் , நாடாளாவிய ரீதியில் 6547 பேருக்கும் இவ் நியமனங்கள் கிடைக்கப் பெற்றிருந்தமை குறிப்பித்தக்கது.

Comments are closed.