டொலர்களை அனுப்புபவர்களுக்கு மத்திய வங்கி ஆளுநரின் அறிவுறுத்தல்…

வெளிநாடுகளில் இருப்பவர்கள் உரிய வழிமுறைகளை பயன்படுத்தி நாட்டுக்கு டொலர்களை அனுப்ப வேண்டும் என்று மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தில் நேற்று (08) நடைபெற்ற வைபவத்தில் கலந்துக்கொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து…..

தெரிவிக்கையில், நாட்டில் நிலவும் டொலர் பிரச்சினை தீர்க்கப்படும் என்றும் கூறினார்
டொலர் பிரச்சினை காரணமாக பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சட்ட ரீதியில் அன்றி வெளிநாட்டு பணத்தை நாட்டுக்கு அனுப்பும் கணக்குகளை தடை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இதன்போது கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் மோசடியான வகையில் பணத்தை நாட்டுக்கு அனுப்பிய வைக்கப்படும் கணக்குகள் தொடர்பில் நாம் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். இவ்வாறான கணக்குகள் சில தடைசெய்யப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர்கள் டொலர்களை, நடைமுறையில் உள்ள உரிய வழிமுறைகளுக்கு அமைவாக அனுப்ப வேண்டும் . யுத்த காலத்தில் முறைகேடாக நாட்டுக்கு வந்த பணத்தை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டோம். சட்ட விதிகள் உண்டு. இப்பொழுதும் இந்த சட்ட விதிகளை பயன்படுத்தி இவ்வாறான முறைகோடு மூலம் வெளிநாடுகளில் இருந்து வரும் டொலர்களை கண்டறிவதற்கு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.