சிவப்பு இலச்சினை பொறிக்கப்பட்ட எரிவாயு சிலிண்டருடன் அடுப்பு வெடித்தது.

வெள்ளைப் பின்னணியில் சிவப்பு இலச்சினை பொறிக்கப்பட்ட பொலித்தீன் உறை கொண்ட எரிவாயு சிலிண்டருடன் பொருத்தப்பட்ட அடுப்பு வெடித்த சம்பவம் ஒன்று உடுநுவர பிரதேசத்தில் இடம்பெற் றுள்ளது.
சிவப்பு இலச்சினை பொறிக்கப்பட்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டர் பொருத்தப் பட்ட வால்வு ஒன்றில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

உடுநுவர எல்பிட்டிய பிரதேசத்தில் கொள்வனவு செய்யப்பட்ட சிலிண்டர் ஒன்றுக்கே இந்த நிலை ஏற்பட்டது.
கடந்த முதலாம் திகதி எரிவாயு சிலிண்டரை கொள்வனவு செய்ததாக அந்த வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் புதிய சிவப்பு இலச்சினை பொறிக்கப்பட்ட பொலித்தீன் உறை கொண்ட எரிவாயு சிலிண்டர் சந்தைக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.