அதிக விலைக்கு சீமெந்தை விற்றால் சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்

சீமெந்து நிறுவனங்கள் நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமாக விற்பனை செய்யும் சீமெந்து விற்பனை யாளர்களைக் கண்டுபிடிக்க சோதனைகளை ஆரம்பித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதன்படி அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
தற்போது ஒரு மூடை சீமெந்துக்கு நிறுவனங்கள் நிர்ணயம் செய்யும் அதிகபட்ச சில்லறை விலை 1275 ரூபாவாகும்.

எனினும், இந்த விலைக்கு அதிகமாக சிமெந்து விற்பனை செய்யப்படுவதாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் நுகர் வோர் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகத் தெரியவருகிறது.

Leave A Reply

Your email address will not be published.