விஷம், மலம் கலந்த உரத்தை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு ஒவ்வாமை.

தற்போதைய அரசாங்கம் விவசாயிகளின் உயிருடன் விளையாடுவதாகவும், இன்று விவசாயி தனது நெற்பயிர்களைப் பார்த்து பெருமூச்சு விடுவதுதான் எஞ்சியுள்ளது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

விஷம் மற்றும் மலம் கலந்த உரத்தை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு பல்வேறு ஒவ்வாமைகள் ஏற்படுவதாகவும், உரத்தை இறக்குமதி செய்வதன் மூலம் கறுப்பு சந்தை மாபியாவும் உருவாக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சி தலைவர் தெரிவித்தார்.

நாடு இன்று கடன் தரத்தில் மிகவும் கீழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், எதிர்காலத்தில் ஒரு கடனைக் கூட பெற முடியாத நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச லுணுகம்வெஹெர பெரலிஹெல பிரதேசத்தில் ‘நகருக்கு நகரம் கிராமத்திற்கு கிராமம்’ வீடு வீடாகச் செல்லும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இப்பிரதேச விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொள்ளவும் எதிர்க்கட்சித் தலைவர் மறக்கவில்லை. குறிப்பாக அரசாங்கத்தின் பொறுப்பற்ற விவசாயக் கொள்கையினால் இப்பிரதேச விவசாயிகள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக விவசாயிகள் எதிர்க்கட்சித் தலைவரிடம் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.