குழந்தைகள் உட்பட நால்வரின் உயிரை பறித்த விமான விபத்து.

அவுஸ்திரேலிய நகரமான பிரிஸ்பேன் கடற்கரையில் சிறிய இலகுரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு பெரியவர்கள் உட்பட இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பயணிகளை 69 வயதான விமானி ஒருவர் கடற்கரையையொட்டிய பகுதிகளை சுற்றிக்காட்டுவதற்காக சிறிய இலகுரக விமானத்தில் அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பிரிஸ்பேனின் வடகிழக்கே உள்ள பகுதியில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துக்குள்ளான ராக்வெல் இன்டர்நேஷனல் விமானம் மோர்டன் விரிகுடாவில் தலைகீழாக மிதக்கும் படங்கள் வெளியாகின.

இதன்போது விபத்தில் உயிரிழந்த ஆண் பயணி மற்றும் குழந்தைகளை அடையாளம் காணும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட நேரத்தில் இது ஒரு சோகமான விபத்து” என்று பொலிஸ் அதிகாரி கிரேக் வைட் கூறியுள்ளார்.

விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை ஆறு முதல் எட்டு வாரங்களில் தாக்கல் செய்யப்படும் என அவுஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு வாரிய ஆணையாளர் அங்கஸ் மிட்செல் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.