‘வங்கிக் கணக்கை மத்திய அரசு முடக்கவில்லை’: அன்னை தெரசா அறக்கட்டளை விளக்கம்

வங்கிக் கணக்குகளை மத்திய அரசு முடக்கவில்லை என அன்னை தெரசாவின் அறக்கட்டளை நிர்வாகம் திங்கள்கிழமை விளக்கமளித்துள்ளது.

கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் அன்னை தெரசாவின் அறக்கட்டளை வங்கிக் கணக்குகளை மத்திய அரசு முடக்கியுள்ளதாகவும், 22,000 நோயாளிகள் உணவு, மருந்துகள் இல்லாமல் தவிப்பதாகவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டிவிட்டரில் தெரிவித்தது நாடு முழுவதும் வேகமாக பரவி வருகின்றது.

இந்நிலையில், அன்னை தெரசாவின் அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில்,

எங்கள் அறக்கட்டளையின் வங்கிக் கணக்குகளை மத்திய உள்துறை அமைச்சகம் முடக்கவில்லை. அந்நிய பணப் பரிவர்த்தனைக்கான சான்றிதழ் புதுப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இப்பிரச்னை சரியாகும் வரை வங்கிக் கணக்கை நிறுத்தி வைக்குமாறு நாங்கள் தான் கேட்டுக் கொண்டோம் எனத் தெரிவித்துள்ளனர்.

 

மத்திய அரசுத் தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், “பாரத ஸ்டேட் வங்கியிடம் அறக்கட்டளை கேட்டுக் கொண்டதால் அவர்களது கணக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு நிதியுதவி பெறுவதற்கான சட்டவிதிகள் முழுமையாக பின்பற்றாத காரணத்தால் கடந்த டிசம்பர் 25ஆம் தேதி அறக்கட்டளை சார்பில் அனுப்பப்பட்ட புதுப்பிக்க கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்யக் கோரி எந்த கோரிக்கையும் எங்களுக்கு வரவில்லை.”

Leave A Reply

Your email address will not be published.