வவுனியா – திருகோணமலை வீதியில் விபத்து.

வவுனியா திருகோணமலை வீதி கெபித்திகொல்லாவ பகுதியில் நேற்று (13) மாலை இடம்பெற்ற விபத்தில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் 13 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

வவுனியாவில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றும் ஊழியர்களை ஏற்றிச்சென்ற இரண்டு பேருந்துகள் டிப்பர் வாகனத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் 12 ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் பேருந்தின் சாரதி ஆகியோர் காயமடைந்தநிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாய் குறுக்கிட்டமையால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்கான மேலதிக விசாரணைகளை கெபித்திகொல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.