மனையை தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டியவைகள் !!

மனையை தேர்வு செய்ய முற்படும் பொழுதே அதில் உள்ள மண்ணை வைத்து அதாவது வாசனையை வைத்து இதில் வீடு கட்டலாம் கூடாது என்று சொல்ல முடியும் என்று நூல்கள் சொல்கிறது. இத்தனை துல்லியமாக நம்மால் கவனிக்க முடியாது சில விவரங்களை நாம் தெரிந்து கொள்வோம்.

மனையின் எதிரில் ஒற்றை பனைமரம், கிணறு, ஆலமரம் எருக்கன் செடி, இல்லாமல் இருக்க வேண்டும். கோவில் கோபுரத்தின் நிழல், அல்லது ஸ்தூபியின் நிழலோ மனை மீது விழ கூடாது. மனையில் பாம்பு புற்று, ஆமையின் ஓடு, உடும்பின் சடலம் இருக்க கூடாது. பெருமாள் கோவிலின் பின்புறம், சிவன் / கணபதி கோவில் முன் புறம் வீடு கட்ட கூடாது.

ஒரு மனை மற்றும் அதனுள் அமைக்கப்படும் கட்டடம் சதுரம் அல்லது செவ்வகமாக இருத்தல் அவசியம். மனை இடத்தின் தெருக்குத்து மற்றும் தெரு தாக்கம் இருக்க கூடாது.கட்டடம் கட்டும் போது தெற்கு மற்றும் மேற்கு பகுதியை விட வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் அதிக காலியிடம் இருத்தல் வேண்டும்.

பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டு உள்ள வார சூன்யம் என்ற நாட்களில் மனை முகூர்த்தம் செய்ய கூடாது. சூரியனின் காலற்ற நட்சரத்தில், செவ்வாயின் தலையற்ற நட்சரத்தில், குருவின் உடலற்ற நட்சரத்தில், மனை முகூர்த்தம் செய்தால் வீடு கைமாறி, அல்லது நின்று போகும்.

அஸ்வினி, ரோகினி, ஹஸ்தம், அனுஷம், திருவோணம், உத்திரட்டாதி, பூசம், ரேவதி, சதயம் நட்சரத்தில் செய்ய உத்தமம் என்று நூல்கள் சொல்கிறது.

Leave A Reply

Your email address will not be published.