செயலிழந்த லக் விஜய மின்பிறப்பாக்கி தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு…

நுரைச்சோலை லக் விஜய அனல் மின் நிலையத்தின் செயலிழந்த மின்பிறப்பாக்கி சீர் செய்யப்பட்டுள்ளதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் அன்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார்.

இதன்படி 900 மெகாவோட் உற்பத்தி செய்யும் குறித்த மின் உற்பத்தி நிலையத்தின் 300 மெகாவோட் மின்சாரத்தை வழங்கும் மின் பிறப்பாக்கி கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் திகதி செயலிழந்தது.

அந்நிலையில் , குறித்த மின் பிறப்பாக்கி சீர்செய்யப்பட்டு தற்போது 160 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை , எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையில் தேவையான மின்சாரம் தொடர்பில் மதிப்பிடப்பட்டு வருவதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

மேலும் ,இந்த தேவையினை தற்போதுள்ள மின் உற்பத்தி நிலையங்களினூடாக அல்லது தனியார் மின் உற்பத்தி நிலையங்களின் மூலம் பூர்த்தி செய்வது குறித்து இதன்போது தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.