அழகுக் கலை கற்கை நெறியினை பூர்த்தி செய்த ஒப்பானையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம்.

இன்று நாட்டில் கொவிட் தொற்றுக் காரணமாக பொருளாதார பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இந்தப் பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியில் தான் எங்களுடைய வாழ்க்கை முறையிலும் நடத்திக் கொண்டிருக்கின்றோம். வாழ்க்கைக்கு தேவையான பல விசயங்களை ஒப்பனை அழகுக் கலையும் உருவாக்கியுள்ளது. எதிர்காலத்தில் அதனை நன்றாக செய்ய வேண்டும் என்று நுவரெலியா மாவட்டப் பாராளுன்ற உறுப்பினரும் மலைய மக்கள் முன்னணியின் தலைவருமான வி. இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

ஸரின் அழகுக் கலையில் டிப்ளோமா கற்கை நெறியினை பூர்த்தி செய்த அழகுக் கலை ஒப்பானையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம் கண்டி ஓக் ரே ஹோட்டலில் ஸரின் அழகுக் கலை கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் சரின் ஸ்ரீபிரியா தலைமையில் இடம்பெற்றது.

அந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரதம அதிதியாக கலந்து கொண்ட நுவரெலியா மாவட்டப் பாராளுன்ற உறுப்பினரும் மலைய மக்கள் முன்னணியின் தலைவருமான வி. இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்…….

கொரோனா ஆறு மாதம் அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு தடவை புதிய பிறழ்வுகள் வந்து கொண்டிருக்கின்றன. கொவிட் 19, டெல்டா, அல்பா, ஒமிக்கோரன் இப்படி ஒவ்வொரு பிறழ்களாக வந்து கொண்டிருக்கும் போது அதற்கு தகுந்தவாறு எங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத் தேவைப்பாடும் இருக்கின்றது. அரசாங்கம் பல கோடி ரூபாக்களைச் செலவு செய்து இந்த நாட்டுக்கு தடுப்பூசிகளைக் கொண்டு வந்திருக்கிறது.

நாங்கள் கட்டாயம் இந்த தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்வதற்கு உணர்வுள்ளவர்களாகவும் கட்டாயம் போட்டுக் கொள்வதற்கு நாங்கள் முயற்சி செய்ய வேண்டும். அரசாங்கம் தான் செய்கின்றது. நாங்கள் இதை ஏன் போட்டுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கக் கூடாது. ஏனென்றால் எங்கள் உயிர்களை நாங்கள் முதலில் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஆகவே நமது உயிர்களை நாங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாயின் முதலாவது இரண்டாவது மூன்றாவது என்கின்ற வகையில் தடுப்பூசிகள் ஏற்பட்டுள்ளன. இவையெல்லாம் பெற்றுக் கொள்வதற்கு அவசியமான கவனத்தைச் செலுத்த வேண்டும். நாம் உயிரோடு இருந்தால் நாம் மற்றைய விவகாரங்களைக் கவணிக்க முடியும்.

அந்த வகையில் தடுப்பூசி விடயத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும். அரசாங்கம் இந்த பொறுப்பு வாய்ந்த விசயத்தைச் செய்கின்றது. பல கோடி ரூபா இந்த தடுப்பூசிகளுக்காக கடன் பெற்று இந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் அதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதிலே எந்தவிதமான அரசியல் பாகுபாடின்றி இனப்பாகுபாடின்றி நாங்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து செய்ய வேண்டும். அரசாங்கம் எடுத்து இருக்கின்ற முயற்சியை பிழையென்று எதையும் விமர்சனம் செய்யக் கூடாது. அரசாங்கம் செய்கின்ற வேலையை விமர்சிக்கின்ற அதேநேரத்தில் அரசாங்கம் செய்யும் நல்ல காரியங்களை பாராட்டுதல் செய்வது எங்களது கடமையாகும்.

இன்று அரசாங்கம் பல்வேறு சிக்கிலுக்கு மத்தியில் விமர்சனத்திற்கு உட்பட்டிருந்தாலும் கூட இதில் இருப்பது அரசாங்கமும் அரசாங்க கட்சியும் மட்டுமல்ல பொது மக்களாகிய உங்களுக்கும் எதிர்கட்சியாக இருக்கின்ற எங்களுக்கும் தான் உருவாகப் போகின்றது. இதில் அரசியல் பாகுபாடின்றி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.

படித்தவர் அனைவருக்கும் வேலை வாய்ப்புக் கிடைப்பது என்பது மிகவும் அரிது. ஆகவே படித்து விட்டு சும்மா இருக்க முடியாது. ஏதாவது தொழில் ஈடுபடுவது முக்கியமான விடயம். ஆகவே அந்த தொழிலை தெரிவு செய்வது என்பது உங்களுடைய பொறுப்பாக இருக்கிறது. சில பேர் அலுவலகம், சிலர் கடைகளுக்கும், ஆடைத் தொழிற்சாலைக்கும், சில சொந்த தொழில் செல்கின்றார்கள். உங்களைப் பொறுத்த வரையிலும் நீங்கள் ஒப்பனைக் கலையினை தெரிவு செய்துள்ளீர்கள்.

ஓப்பனைக் கலைஞர் என்பது சுனிமாயிலும் சின்னத் திரையிலும் மணப்பெண்களுக்கும். கலை கலாசார ஈடுபடும் பெண்களுக்கும் இது மிக முக்கியமான தொழிலாக இருக்கின்றது. இந்த தொழிலைச் செய்வதற்கு ஒரு களம் வேண்டும். அதற்கான ஷரின் அழகுக் கலை பயிற்சியினை வழங்கிக் கொண்டிக்கின்றோம். ஒரு நல்ல பணியை செய்து கொண்டிருக்கின்றார்கள். இது மலையக பெண்களுக்கு மிக அவசியமான தொழிலாகும். ஷரின் அவர்கள் ஒரு நல்ல பணியைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். இதைப் பயின்று நல்ல நிலைக்கு வர வேண்டும்.

இந்தக் கலையின் மூலமாக அதிகமாக சம்பாதிக்காலம் என்ற நோக்கம் இருக்கக் கூடாது. எங்களுடைய வாழ்க்கை விழுமியங்களையும் கலாசார அம்சங்களையும் பேணுவதற்கான சந்தர்ப்பத்தை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இங்கு தமிழ், முஸ்லிம், பௌத்த என பல்லின சமூகத்தை சேர்ந்தவர்களுடைய ஆடை அலங்காரங்களை அழகான முறையில் வெளிப்படுத்தியிருந்ததை காணக் கூடியதாக இருந்தது. அதற்கு ஏற்றவாறு உங்களது ஒப்பனைக் கலையைச் செய்து அவர்களையும் சந்தோசப்படுத்தி அவர்களது குடும்பத்தையும் சந்தோசப்படுத்தி உங்களையும் உங்களது வாழ்க்கையினையும் சந்தோசப்படுத்துவதற்காக கூடிய விடயம் தான் அழகுக் கலை அமைந்துள்ளது.

இந்தச் சந்தர்ப்பத்தில் இலக்கியவாதி இரா. அ. இராமன் அவர்களையும் சிரேஷட ஊடகவியலாளர் ஜே. எம். ஹாபிஸ் அவர்களையும் பாராட்டி கௌரவிக்கப்பட்டமை வரவேற்கத் தக்கதாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கண்டி தமிழ் வர்த்தக சங்கத்தின் தலைவர் அன்பழகன், தொழிலதிபர் முத்தையா ஸ்ரீகாந்தன் எழுத்தாளர் கலாபூசணம் இஸ்மாலிகா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

(இக்பால் அலி)

Leave A Reply

Your email address will not be published.