நாடு முழுவதும் ஒரே நேரத்தில் அபிவிருத்திப் பணிகள். கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு எண்ணக்கருவிற்கமை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில், நீதி அமைச்சர் பஷில் ராஜபக்க்ஷவின் திட்டமிடலில் இன்று நாடளாவிய ரீதியில், 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒரு இலட்சம் பணிகள் எனும் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நெறிப்படுத்தலில் கிளிநொச்சி மாவட்டத்தின் 95 கிராம சேவகர் பிரிவுகள் தோறும் பல்வேறு வேலைத் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, பாரதிபுரம் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிட விஸ்தரிப்பிற்கான அடிக்கல்லினை அமைச்சர் நாட்டி வைத்தார்.

இதேவேளை

சமுர்த்திப் பயனாளர்களுக்கு நிரந்தர வாழ்வாதாரத்தினை ஏற்படுத்தும் நோக்கில் சுயதொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதற்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கான உபகரணங்களை வழங்கி வைத்தார்.

கரைச்சி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இன்று நடைபெற்ற இக்கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபாவதி கேதீஸ்வரன் உட்பட்ட அரசாங்க அதிபர் உட்பட்ட அதிகாரிகளும், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரின் இணைப்பாளர் வை.தவநாதன் உட்பட்ட அரசியல் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.