பெண்கள் ஐ. பி. எல் கிரிக்கெட் தொடங்குவதற்கான முயற்சிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

பெண்கள் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முதன்முறையாக தொடங்க உள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார். அதற்கான முயற்சிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும், இதனை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்று கூறினார். அவர் தெரிவித்ததாவது,

இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளின் போது, 3 அணிகள் மட்டும் பங்கேற்கும் பெண்களுக்கான டி20 போட்டிகள் நடைபெற உள்ளது. இம்முறை ஐ.பி.எல் தொடரில் 10 அணிகள் விளையாட உள்ளன.

கொரோனா தொற்று குறைந்து வரும் சூழலில் இந்தியாவில் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது. பார்வையாளர்களை அனுமதிப்பது பற்றி அப்போதைய சூழ்நிலையை பொறுத்து முடிவு எடுக்கப்படும்.

ஒலிம்பிக் விளையாட்டுகளில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. அதன்மூலம் கிரிக்கெட் விளையாட்டு உலக அளவில் மேலும் விரிவடையும்.

Leave A Reply

Your email address will not be published.