கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு புதிய பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளோம் : நிதி அமைச்சர் பி.டி.ஆர்

8 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு வரும் பட்ஜெட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்படும் என மதுரையில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

மதுரை மாநாகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து ஆரப்பாளையத்தில் தமிழக நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது, பேசிய பழனிவேல் தியாகராஜன், “நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் போலவே நகர்புற தேர்தல் மக்களுக்கு முக்கியமான தேர்தலாக உள்ளது, வளர்ந்த நாட்டை ஒப்பிடும் போது தமிழகத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளது.

அதிமுக ஆட்சி காலத்தில் வார்டுகள் மறுவரையில் குளறுபடி செய்யப்பட்டு உள்ளன, பெண்களுக்கு சம வாய்ப்புகள் கிடைப்பதில்லை, தேர்தல் வழியாக பெண்களுக்கு சம வாய்ப்புகள் கிடைக்கின்றது, மக்களுக்காக நிதியை ஒதுக்கீடு செய்வதில் எனக்கு எந்த இடையூறும் இல்லை, நிதியை வைத்து ஊழல் செய்த ஆட்சி 10 ஆண்டுகளாக நடைபெற்று இருக்கிறது.

நிதி விவகாரத்தில் எதிர் வரும் பட்ஜெட்டில் சில மாற்றங்கள் கொண்டு வர உள்ளேன். 8 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு வரும் பட்ஜெட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்படும். தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்ற பாடுபட்டு வருகிறோம்.

ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் 2 முறை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளேன், மக்களின் எதிர்காலத்திற்கு யார் ஆட்சிக்கு வந்தால் நன்றாக இருக்கும் என சிந்தித்து வாய்ப்பு அளிக்க வேண்டும்” என பேசினார்.

Leave A Reply

Your email address will not be published.