டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிலும் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி.

யாழ்ப்பாணம் – காங்கேசந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வறுத்தலைவிளான் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிலும் விபத்துக்குள்ளானதில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

இன்று காலை தெல்லிப்பழை சாந்தை வீதி வறுத்தலைவிளான் பகுதியில் மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்களும் எதிதெதிரே மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில் மற்றைய இளைஞர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து சம்பவம் தொடர்பில் டிப்பர் சாரதி காங்கேசந்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம், இளவாலை, உயரப்புலத்தை சேர்ந்த 18 வயதுடைய சசிக்குமார் லிசான் என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காங்கேசந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.