சட்டமா அதிபர் மீது குற்றம் சாட்டி , வத்திக்கான் செல்ல மல்கம் கர்தினால் முயற்சி..!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் இறுதிப் பரிந்துரைகளை அமுல்படுத்த முடியாத சட்டமா அதிபர், தற்போது தாக்குதலுக்கு நீதி கேட்டவர்களை கைது செய்து வருவதாக இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்தார்.

சட்டமா அதிபருக்கு நீதி கேட்பவர்களை உரிமை இல்லை என சுட்டிக் காட்டியுள்ள கார்டினல் , சட்டமா அதிபரும் பொலிஸ் மா அதிபரும் அரசியல் உலகில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அல்ல, மக்களுக்குச் சேவை செய்வதற்கும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதற்கும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மக்களின் அடிப்படை உரிமைகள் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள இவ்வேளையில் சிவில் உரிமைகள் மற்றும் பொதுப் பாதுகாப்பிற்காக நீதிமன்றங்களின் உதவியை நாடவுள்ளதாக கர்தினால் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பேராயர் மல்கம் ரஞ்சித் கர்தினால் இம்மாத இறுதியில் வத்திக்கானுக்கு விஜயம் செய்ய தீர்மானித்துள்ளார்.

இந்த பயணத்தின் போது, ​​ஈஸ்டர் தாக்குதலின் தற்போதைய நிலை குறித்து விளக்குவதற்காக, போப் மற்றும் பிற உயர்மட்ட வத்திக்கான் அதிகாரிகளை கர்தினால் சந்திக்க உள்ளதாக அவர் தொடர்பான வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்காக கடந்த இரண்டு நாட்களாக அமெரிக்காவின் பேராயருடன் கர்தினால் தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.