நான் பிரதமரானால் முழு அரச இயந்திரத்தையும் பாவித்து மக்கள் துயர் துடைப்பேன் – சஜித் (video)

மக்களின் அவல நிலைக்கு தீர்வு என்னை பிரதமராக்க வேண்டும். நான் பிரதமரானால் முழு அரச இயந்திரத்தையும் பாவித்து மக்கள் துயர் துடைப்பேன். இந்த நாட்டில் கோடிக்கணக்கான மக்களுக்கு கடுமையான உதவி தேவைப்படுகிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

பொறுப்பான அரசு என்றால் இந்த மக்களின் உயிரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்றைய மக்களின் எதிர்பார்ப்பு மனித நேயம் கொண்ட அரசினூடாக மக்களின் குறைகளை தீர்க்கும் மக்களின் நிகழ்ச்சி நிரல் என்று கூறியதோடு சாதாரண மக்களுக்காக அந்தக் கடமையை நிறைவேற்றத் தாம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இணைய வீடியோவொன்றினூடாக இக் கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.