பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொனாகோவிலே ராஜா பலி

சொய்சாபுர பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் உள்ளிட்ட பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரின் மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்ய முற்பட்டதனையடுத்து பொலிஸாரின் பதில் துப்பாக்கி பிரயோகத்தினால் உயிரிழந்துள்ளார்.

‘கொனாகோவிலே ராஜா’ என்ற புனை பெயருடைய பத்திரனகே ராஜா விமலதர்ம என்பவரே இந்த துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.

பாதாள உலகக் குழுவின் தலைவர் ஒருவர் மினுவாங்கொடை பகுதியில் மறைந்திருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதனையடுத்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பேலியகொடை பிராந்திய குற்ற விசாரணை அதிகாரிகளால் இன்று அதிகாலை இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன உறுதிப்படுத்தியுள்ளார்.

Comments are closed.